🔥 Earn $600 – $2700+ Monthly with Private IPTV Access! 🔥

Our affiliates are making steady income every month:
IptvUSA – $2,619 • PPVKing – $1,940 • MonkeyTV – $1,325 • JackTV – $870 • Aaron5 – $618

💵 30% Commission + 5% Recurring Revenue on every referral!

👉 Join the Affiliate Program Now
G.V. Prakash Kumar
Kaakarattan

[Chorus]
காக்கரட்டான் பூத்திருச்சே
கண் தொறந்தே சூரியந்தான் பாத்திருச்சே
காட்டு தட்டான் கூட்டுவச்சே
சேவலெல்லாம் கூவுதம்மா கூத்தடிச்சே

[Verse 1]
ஆடி வரும் தேரழகா
ஆசமனம் தந்தனத்தோம் போட்டிருசே
கூடிவரும் ஊருசனம்
நெஞ்சுலதான் மாவிளக்க ஏத்திருச்சே
ஜோரா

[Chorus]
காக்கரட்டான் பூத்திருச்சே
கண் தொறந்தே சூரியந்தான் பாத்திருச்சே

[Instrumental-break]

[Verse 2]
நீரோடும் வாய்காலில்
தூண்டில் போட்டு
ஓயாமல் கேட்பேனே
மீனின் பாட்டு
ஆவாரம் பூபேசும்
வார்த்தை கேட்டு
[Verse 3]
ஆட்டோடும் மாட்டோடும்
வைப்பேன் கூட்டு
பனந்தோப்பின் ஓரம்
ரயில் ஓடும் காகம்
அதை பார்த்தே நின்றால்
போதாதோ?
வயற் காட்டில் வீசும்
ஒரு தாயின் வாசம்
அதற் கீடாய் இங்கே
வேறேதோ?

[Verse 4]
பூங் குருவியே உன் முதுகிலே
வான் எழுதுதோ
அழகிய கவிதை?
ஊர் முழுதுமே
பேர் அழகிலே
யார் தடுப்பதோ
தொலைகிற மனதை?

[Pre-Chorus]
வெள்ளந்தி சொல்லம்மா
வெட்கங்தான் என்னம்மா?

[Chorus]
காக்கரட்டான் பூத்திருச்சே
கண் தொறந்தே சூரியந்தான் பாத்திருச்சே
காட்டு தட்டான் கூட்டுவச்சே
சேவலெல்லாம் கூவுதம்மா கூத்தடிச்சே