Ostan Stars
70.Neerae Aadhaaram
நீரே ஆதாரம்
என்று அறிந்தேன்
என் ஆசைகளை
உம்மிடத்தில் விட்டுக்கொடுத்தேன்
நித்தம் உம் வாக்கை
நம்பி நடப்பேன்
நீர் செய்வதெல்லாம்
நன்மைக்கென்று
உணர்ந்துகொண்டேன்
தந்துவிட்டேன்
முழுவதுமாய்
நம்புகிறேன்
இன்னும் அதிகமாய்
என் சுக வாழ்வை நீர்
துளிர்க்க செய்யும் நேரம்-இதுவே
நீரே ஆதாரம்
என்று அறிந்தேன்
என் ஆசைகளை
உம்மிடத்தில் விட்டுக்கொடுத்தேன்
1.எண்ணுக்கடங்கா
என் கேள்விக்கெல்லாம்
என்று கிடைக்கும்
ஏற்ற பதில்கள்
எத்தனையோ வாக்குகள்
நீர் கொடுத்தும்
என்று நிறைவேறும்
என்ற நிலைகள்
காத்திருக்கும் காலம்
எதிர்காலங்களை மாற்றும்
காயங்களும் கூட
கரம் நீர் பிடிக்க ஆறும்
உம் சித்தம் அழகாக நிறைவேறும்
நீரே ஆதாரம்
என்று அறிந்தேன்
என் ஆசைகளை
உம்மிடத்தில் விட்டுக்கொடுத்தேன்
நித்தம் உம் வாக்கை
நம்பி நடப்பேன்
நீர் செய்வதெல்லாம்
நன்மைக்கென்று
உணர்ந்துகொண்டேன்
2.ஆசைகள் ஆயிரம்
எனக்கிருந்தும்
அனைத்தும் தந்தேன்
உந்தன் கரத்தில்
ஆழ்மனதில்
அது வலித்தும்
அதிலும் மேலாய்
நீர் தருவீர் என்றேன்
உம் விருப்பம் ஒன்றே
அது என் விருப்பமாகும்
நீர் தருவதெல்லாம்
நிறைவாய் நிலைப்பதாகும்
உம் திட்டம் தடையின்றி நிறைவேறும்
நீரே ஆதாரம்
என்று அறிந்தேன்
என் ஆசைகளை
உம்மிடத்தில் விட்டுக்கொடுத்தேன்
நித்தம் உம் வாக்கை
நம்பி நடப்பேன்
நீர் செய்வதெல்லாம்
நன்மைக்கென்று
உணர்ந்துகொண்டேன்
என்னைவிட
எனக்கெது சிறந்தது
என்று அறிந்தவர் அவரே
கண்ணை வைத்து
ஆலோசனை சொல்லித்தந்து
கலங்காதே என்றவரே
என் நல்ல எதிர்காலம் அவரே
என் இதயமெங்கும் நிறைந்தவரே